உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.
இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த முறை கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
மணிரத்தினத்தின் தக் லைஃப், கல்கி 2898 AD ஆகிய படங்கள் கமலஹாசனின் கைவசம் உள்ளது. இதில், வினோத்தின் உடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் பிசினஸ்மேன் என பல ரூபங்களை கொண்ட விஸ்வரூப நாயகனின் சொத்து மதிப்பு தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, 2024 கமலஹாசனின் சொத்து மதிப்பு ரூபாய் 388 கோடி என்று சொல்லப்படுகிறது.
இவர் ஒரு படத்திற்கு நடிக்க 100 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்குவதாகவும், கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மட்டும் 120 கோடி சம்பளமாக வழங்கியதாக திரை வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கமலஹாசனின் வீட்டின் மதிப்பு மட்டும் 19 கோடி இருக்குமாம். இவருடைய வீடு மட்டும் இன்றி கமலஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களின் மதிப்பு 92 கோடி என பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் ஏழு சொத்துக்களும், பெங்களூரில் இரண்டு சொத்துகளும், மங்களூர், கர்நாடகா, கோவை, மும்பை, லண்டன் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசனின் வீடு அவரது பரம்பரை சொத்தாகும். இந்த வீட்டை கமல் அறுபது ஆண்டு காலமாக பராமரித்து வருகிறார். இவர் ஹோட்டல்கள் மற்றும் துணிக்கடை, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளார். இவருக்கு பின்வந்த நடிகர்கள் இவரை விட அதிகமாக சொத்துக்களை வைத்திருந்தாலும், 60 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இவரின் சொத்து மதிப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.