பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே
Author: Prasad19 April 2025, 12:22 pm
விண்வெளி நாயகன்
கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது பலரும் அழைத்து வருகின்றனர். “தக் லைஃப்” திரைப்படத்தின் மூலம் இந்த பட்டம் அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

கமல்ஹாசன் சினிமாத்துறையில் மிகப்பெரிய அறிவுஜீவியாக பார்க்கப்படுபவர். சினிமா மட்டுமல்லாது இலக்கிய பரிச்சயமும் அவருக்கும் அதிகம் உண்டு. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சமயத்தில் அதிக புத்தகங்களை ரசிகர்களுக்கு பரிந்துரைத்தது உண்டு. இந்த நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது கமல்ஹாசனை சந்தித்த நிகழ்வை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
என்னை அவமானப்படுத்திட்டார்
சாரு நிவேதிதா ஒரு எழுத்தாளர் மட்டுமல்லாது சினிமா விமர்சகரும் கூட. அந்த வகையில் கமல்ஹாசனின் பல திரைப்படங்களை பாராட்டியுள்ளார். ஆனால் சில திரைப்படங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் ஒரு பிரபலமான திரைப்படத்தை சாரு நிவேதிதா மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டாராம்.

இதனை தொடர்ந்து ஒரு நாள் ஒரு விழாவில் கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது சாரு நிவேதிதாவுடன் இருந்த பலருக்கும் கமல்ஹாசன் கைக்கொடுத்தாராம். ஆனால் சாரு கைக்கொடுக்கும்போது கமல்ஹாசன் கைக்கொடுக்க மறுத்திவிட்டாராம். இந்த சம்பவத்தை சாரு நிவேதிதா அப்பேட்டியில் மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.