அந்த நடிகை எனக்கே துணைவியாக வருவார்னு எதிர்பார்க்கல – காதல் லீலையில் கமலின் ஆசை பேச்சு!
Author: Rajesh6 January 2024, 2:16 pm
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.
அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கமல் ஹாசன் நடிகை கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது அவர் பேசிய ஆசை வார்த்தைகள் இணையத்தில் கசிந்து பேசுபொருளாகியுள்ளது. ஆம், காதலில் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. நடிகை கௌதமி என்னுடன் திரைப்படங்களில் நடித்துவிட்டு எனக்கே துணைவியாக வருவார் என்று நான் சற்றும் நினைத்ததில்லை.
அவர் மிகச்சிறந்த திறமைசாலி. கௌதமியோடு பழகும் போது அவரது சிந்தனை வடிவம் தான் என்னை வெகுவாக கவர்ந்தது. அதை நான் பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி துணையாக உருமாறி விட்டது என்று மனதில் பட்டத்தை மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார் கமல்.