“என் அன்பு காதலி” தொகுப்பாளினியிடம் கூறிய கமல் ஹாசன் – நிறைவேறாத காதல் குறித்து உருக்கம்!

Author: Rajesh
2 January 2024, 11:12 am

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

kamal-haasan

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை ஸ்ரீவித்யா உடன் நெருங்கி பழகி வந்தார் . கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ” சொல்லத்தான் நினைக்கிறேன்”. அதன் பின்னர் செல்லுலாய்டில் பூத்த களாசிக் காதல், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து ரகசிய உறவில் நெருக்கமாக பழகி வந்தார்கள். இருந்தாலும் கமல் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான், ” அவள் இறந்தாலும் இறவா நட்பு” என்றெல்லாம் கூறியுள்ளார்.

இதனிடையே ஸ்ரீவித்யா கடந்த 2006 -ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் உயிர் பிரியும் நேரத்தில் தன்னை சந்திக்க நினைத்த யாரையும் பார்க்க விரும்பவில்லை என கூறி மறுத்த அவர் கமலை மட்டும் தான் இறப்பதற்குள் ஒரு முறையாவது பார்த்துவிடவேண்டும் என ஏங்கினாராம். விஷயமறிந்து ஸ்ரீவித்யாவை பார்க்க சென்ற கமல் கட்டிப்பிடித்து கதறி அழுதாராம்.

kamal srividya

அவர்களின் உறவு அவ்வளவு புனிதமானதாக இருந்ததாம். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி டிடி கமல் ஹாசனிடம் ஸ்ரீ வித்யா உடனான காதல் குறித்து கேட்டதற்கு, சற்றும் தயங்காமல் பதில் அளித்த கமல், ‘ஸ்ரீ வித்யா என்னுடைய அன்பு காதலி. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை’ என கூறினார். ஸ்ரீ வித்யா – கமல் ஹாசனின் காதலை ஸ்ரீ வித்யாவின் தாய் ஏற்க மறுத்ததால் இந்த காதல் முறிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

  • Vijay TV couple Decides Honeymoon in the Amazon forest கல்யாணம் முடித்த கையோடு காட்டுக்குள் ஹனிமூன்…. விஜய் டிவி ஜோடியின் விசித்திர முடிவு!