பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்போகும் சிம்பு… இனிமேல் வேறமாதிரி இருக்கும்!

Author: Rajesh
12 December 2023, 8:20 am

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7 சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி 71 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது வரை பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

சமீபத்தில் நிக்சன் அர்ச்சனாவுக்கிடையே பிக் பாஸ் வீட்டில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனா வினுஷா குறித்து பேச தொடங்கியதும், நிக்சன் சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகீருவேன் என்று மோசமாக பேசியதெல்லாம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.

நிக்சனின் பேச்சுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சீசனை கமல் சரியாக தொகுத்து வழங்கவில்லை என அவர் மீது மக்கள் அத்திருப்தியில் இருக்கின்றனர். ஆம், தற்போது ஒளிபரப்பாகி வரும் 7ம் சீசனில் கமல் ஒருதலைப்பட்சமாக இருக்கிறார் என விமர்சனம் எழுந்து வருகிறது.

குறிப்பாக பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டு அது சர்ச்சை ஆன பிறகு அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சமாளித்து, மாயா கேங்குக்கு ஆதரவாக பேசியதால் மக்கள் அவர் மீது கடுங்கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதன் எதிரொலியாக கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப்போவதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 459

    0

    0