ஒருவேளை அப்படி இருக்குமோ… பிரபல நடிகையுடன் ரகசிய சந்திப்பில் கமல்ஹாசன்..!

Author: Vignesh
17 February 2023, 12:30 pm

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டடு வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளும் கமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கமலின் படங்களில் நடிகைகளுடன் எதாவதொரு நெருக்கமான காட்சியோ முத்தகாட்சியோ அமைந்திருக்கும். அப்படி சமீபத்தில் திரைக்கு வந்த விஷ்பரூபம், உத்தம வில்லன் படங்களில் நடிகை பூஜா குமாருடன் மிகவும் நெருக்கமாகவும் நடித்திருப்பார்.

kamal - updatenews360

உத்தம வில்லன் படத்திற்கு பின்பும் இருவரும் சேர்ந்து வெளியில் சென்றும் பொது நிகழ்ச்சிக்கு ஜோடியாகவும் வந்து ஷாக் கொடுத்தனர். இதனால், இருவருக்கும் ரகசிய தொடர்பு இருக்கும் என்று வதந்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பரவியது.

இதனையடுத்து பூஜா குமார் கமல் தன்னுடைய நெருங்கிய நண்பர், அவர் மீது நல்ல மரியாதை இருக்கிறது என்றும் கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

kamal - updatenews360

இப்படி கூறிய நிலையில், சில வருடங்களுக்கு பின்னர், பூஜா குமார் திடீரென திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

தற்போது பூஜா குமாருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் கமல் ஹாசன் மற்றும் பூஜா குமார் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

kamal - updatenews360

ஆனால் அந்த புகைப்படம் படத்தின் ஷூட்டிங்கின் போது இருவரும் சென்ற புகைப்படம் தான் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 763

    4

    4