சினிமா / TV

கமல் கேரவனுக்குள் முக்கிய புள்ளிகள்… கண்ணை கவரும் சொகுசு வசதிகள்..!

கமல்ஹாசன் கேரவனில் முக்கிய அரசியல்வாதிகள்

சினிமா நடிகர்,நடிகைகள் தற்போது எங்கே படப்பிடிப்பு நடந்தாலும் தங்களுக்கென்று தனித்தனி கேரவன்களை வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கேரவன் புழக்கம் எப்படி வந்தது என பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்,அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் கேரவனை பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது 2010 ஆம் ஆண்டிற்கு பிறகே கேரவன் நடைமுறைப்படுத்தப்பட்டது.அப்போது ஆரம்பத்தில் ரஜினி,கமல் போன்ற முக்கிய நடிகர்கள் மட்டுமே கேரவனை பயன்படுத்தி வந்தார்கள்,ஆனால் இப்போது ஒவ்வொருவரும் 4 அல்லது 5 கேரவன்களை படப்பிடிப்பு தளத்திற்கு எடுத்து செல்கிறார்கள்,அந்த அளவிற்கு படங்களின் விற்பனையும் அதிகமா இருப்பதால்,படக்குழுவும் அதை ஏற்று கொள்கிறது.

இதையும் படியுங்க: இதுக்கெல்லாம் இனி நான் பொறுப்பல்ல.. திரிஷா முடிவு : ரசிகர்கள் ஷாக்?

முதன்முதலில் 3 கேரவன்களை வாங்கி படப்பிடிப்பிற்கு வாடகைக்கு விட்டவர் இயக்குனர் மணிவண்ணன் தான்,இப்போது கமல்ஹாசன் பல சொகுசு வசதிகள் கொண்ட ஆடம்பர கேரவனை வைத்துள்ளார்,தூங்குவதற்கு,சமைப்பதற்கு,ஓய்வு எடுக்க என தனி தனி அறைகள் உள்ளன,4 ஏசிகள் பொருத்தப்பட்டு VIP-களை சந்தித்து பேச தனி இடம் உள்ளது,மேலும் மற்ற கேரவன்களில் 500 லிட்டர் தண்ணீர் தான் பிடிக்க முடியும்,ஆனால் கமலுடைய கேரவனில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வசதி உள்ளது.

தமிழகத்திற்கு பிரதமர் எப்போதெல்லாம் வாராரோ கமலின் கேரவன் தான் அனுப்பப்படும்,அதே போல தமிழக முதல்வர் வெளியூர் செல்லும் போது கேரவன் ஏதும் தேவைப்பட்டால் கமல்ஹாசனின் கேரவன் தான் பயன்படுத்துகிறார்,இதன் மூலமும் கமல்ஹாசன் வருமானத்தை ஈட்டி வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

Mariselvan

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

4 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

4 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

5 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

5 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

5 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

6 hours ago

This website uses cookies.