விஜயகாந்த் சேர்த்து வச்ச சொத்து… நினைவேந்தலில் கமல் ஹாசன் நெருடல்!

Author: Rajesh
20 January 2024, 6:29 pm

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள்- நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவர்களை தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என லட்சக்கணக்கானோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் அவர் விருப்பத்தின் படியே மக்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சரத்குமார் , சத்யராஜ், விஷால், நடிகை தேவயானி , உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு பேசினார்கள். அப்போது பேசிய நடிகர் கமல் ஹாசன், நான் விஜயகாந்த் அவர்கள் மரணத்தின் போது அவரை காண வந்த கூட்டத்தை பார்த்து சிலிர்த்துபோனேன்.

ஆம், தமிழ்நாட்டில் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் மறைந்தபோது வந்த கூட்டம் விஜயகாந்த் மறைவுக்கு வந்திருந்தார்கள். விஜயகாந்த் சேர்த்து வச்ச சொத்து அதுதான். அவரை பற்றி வழக்கம் போல் நான் சொல்வது இது தான்….விஜயகாந்தின் நியாயமான கோபம் எனக்குப் பிடிக்கும். நியாயமான கருத்தை நாக்கைக் கடித்துக் கொண்டு சொல்ல வேண்டிய இடத்தில் தைரியமாகச் சொல்லிவிடுவார். அவரின் அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியாக இருந்திருக்கிறது. இனி அவர் போல் இல்லை என சொல்வதை விட அவர் போல் இருக்க முயற்சிப்போம் என்றார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 540

    0

    0