நடிகர் கமல் ஹாசனின் மோசமான செயல்
தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது கதை திருட்டு.
ஒரு படத்தின் கதை மற்றொரு படத்தின் கதை கருவையோ, அல்லது கதையின் சாயலையோ கொண்டிருக்கும்போது அந்த கதையின் படைப்பாளர் இது தன்னுடைய கதை என உரிமை கோருவது உண்டு. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீதும் கதை திருட்டு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி திரைப்படம்
தேவர் மகன் கதைக்கு முண்டியடித்து பெயர் போட்டுக் கொள்ளும் கமல் ஹாசன் இந்த கதையை எழுத வில்லையாம்.
ஏனென்றால் தேவர் மகன் படத்திற்கு முன்னர் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படம் தோல்வி அடைந்ததால் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கங்கை அமரனிடம் கதை கேட்டு அந்த கதை தான் தேவர் மகன் எனவும் அதற்கு முதலில் அதிவீரபாண்டியன் என பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்க்கான கதை கதையாசிரியர் கலைஞானத்தினுடையது எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கமல்ஹாசனின் மனைவியை காதலித்த பிரபல நடிகர் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!
இப்படத்திற்கு கமல்ஹாசன் அதிக பணம் தருவதாக கூறி வெறும் 25 ஆயிரம் மட்டும் தனக்கு கொடுத்ததாக ஒரு பேட்டியில் கலைஞானம் தெரிவித்திருப்பார். இந்திய சினிமாவின் பெரும் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்த தேவர் மகன் திரைப்படம் ஒரு திருடப்பட்ட கதை என்பது மோசமான செயலாக கருதப்படுகிறது.