காங்கிரஸ் தலைவர் போல மாறிய கமல்ஹாசன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் வெளியான போட்டோ.. நெட்டிசன்கள் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 6:24 pm

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது.
அதை முன்னிட்டு, ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் கமலின் புதிய தோற்றத்தை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதில், எங்கள் பொக்கிஷம். பன்முகத் திறமை கொண்ட கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் ராம்சரண் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். அதற்காக மாதத்தில் 12 நாட்கள் என பிரித்து வேலை செய்கிறார். அதில் ராம்சரண் படத்திற்காக சமீபத்தில் நியூசிலாந்து சென்று திரும்பினார் ஷங்கர். அங்கு அந்த படத்திற்கான பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் தொடங்கியுள்ளனர். 20-ஆம் தேதி வரை சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கமல் பங்கேற்ற போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்தியன் படத்தில் வந்த சேனாபதி தாத்தா கேரக்டரில் தோன்றுகிறார்.

ஒரு சிலர், ஒரு சாயலில் அவர் அப்படியே காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு சிலர் இந்தியன் தாத்தா வேஷ்டி ஷர்ட்டில் இருந்து வடமாநில உடைகளுக்கு மாறியுள்ளார் என கிண்டலடித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ