ஜிப் போடாமல் சிக்கிய கமல்.. ஆண்டவரே ஆண்டவரேன்னு கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே பிரதீப் ஆர்மி..!
Author: Vignesh9 November 2023, 3:51 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான பிந்து மாதவி கமலுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பாத்ரூம் கதவை சாத்தாமல் பிரதீப் நடந்து கொண்ட செயல் பெண்களிடம் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தியதாக ரெக்கார்ட் கொடுத்து கமல் அனுப்பினார். ஆனால், நடிகையுடன் இப்படி ஜிப்பு போடாமல் போஸ் கொடுக்கலாமா இது சரியா என்று பிந்து மாதவி போட்ட புகைப்படத்திற்கு கீழ் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து பிந்து மாதவி உடனே அந்த புகைப்படத்தை நீக்கி விட்டார்.