நடிப்பதை நிறுத்துகிறேன் சொன்ன கமல்; கதறி அழுத இயக்குனர் நடிகர்; மேடையில் கமல் சொன்ன ரகசியம்,..

Author: Sudha
8 July 2024, 12:47 pm

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்த வரும் எஸ்டிஆர் 48 படத்தை தன் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில் இந்தியன் 2 பிரமோஷன் விழாவில் சிம்பு கலந்து கொண்டார். அதில் எமோஷனல் ஆக சிம்பு பேசியதைக் கேட்ட கமல்ஹாசன், என் முதுகுக்கு பின்னால் பேசும் வார்த்தைகள் மிக உண்மையானது என நம்புபவன் நான்.

மற்றவர்களுக்கு கவலைப்படும் சிம்புவின் இந்தக் குணம் எப்படி வந்தது என்பதைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.அந்த குணம் அவருடைய அப்பாவால் வந்தது.

ஒரு முறை நான் சினிமாவில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என சொல்லியபோது டி ராஜேந்தர் என்னைத் தேடி வந்தார். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு என் சட்டை நனையும் அளவிற்கு அழுதார்.”நீங்க நடிக்கிறதை நிறுத்தக்கூடாது! நிறுத்த மாட்டேன் அப்படின்னு சத்தியம் செஞ்சு கொடுங்க” எனக் கேட்டார்.

நான் இந்த மேடையில் நிற்பதற்கு அவரும் ஒரு காரணம் “உன் அப்பாவிடம் போய்ச் சொல்” என மனம் நெகிழ்ந்து சிம்புவிடம் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ