கமல் ஹாசன் வீடு நிறைய பணத்தை கொட்டிய பிக்பாஸ்… இத்தனை கோடி கொடுக்க காரணம் என்ன தெரியுமா?

Author: Shree
3 September 2023, 11:06 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

7வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்கப்போகும் 18 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் குறித்த செய்தி ஏற்கனவே நம் தலத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தற்போது இந்த 7வது சீசனை தொகுத்து வழங்கப்போகும் கமல் ஹாசனின் சம்பள தொகை குறித்த தகவல் வெளியாகி எல்லோரையும் பிரம்மிக்க செய்துள்ளது. ஆம், ரூ. 130 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். முந்தைய சீசனுக்கு ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கினார். அதன் பின்னர் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் கமல் ஹாசனின் மார்க்கெட் கிடுகிடுவென உச்சத்தை தொட்டுவிட்டது. இதனால் அவர் அடுத்தடுத்த மாஸான கதைகளில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது. இதனை கணக்கிட்டு தான் கமலின் சம்பளத்தை அவர் கேட்காமலே உயர்த்தி கொடுத்துள்ளதாம் பிக்பாஸ் நிறுவனம்.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்