கமலுக்கு திடீரென உடல் நலக்குறைவு… பதற்றத்துடன் லண்டன் பறந்த உலக நாயகன்!
Author: Rajesh5 February 2024, 10:02 am
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வரும் கமல் ஹாசன் இன்று உலக நாயகனாக பெயரெடுத்துள்ளார். 69 வயசிலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக டாப் இடத்திலே இருந்து வருகிறார். திரைப்படம், அரசியல், தொகுப்பாளர் என துறைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
கமல் ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாயகன் திரைப்படம் போல கேங்ஸ்டர் ஜானர் மூவியாக வெளியாகவுள்ள இப்படத்தில் த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. காரணம், நடிகர் கமல் ஹாசனுக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாம். நீண்ட நேரமாக படப்பிடிப்பில் இருந்ததால் தான் கமலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.