புன்னழகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா 2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் விட்டிருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார். தற்போது தளபதி 68 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இதனிடையே ” ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ்” என்ற பெயரில் புதிய பிசினஸ் ஒன்றை துவங்கியுள்ளார். அதன் விளம்பர ஷூட்டிங்கில் கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து ரொமான்டிக் போஸ் கொடுத்த அழகிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி அதனை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது அதிலும் ” பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” பாடல் இந்த ரியல் ஜோடிக்கு பக்காவாக பொருந்துகிறது என ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் கமல்ஹாசனும் சினேகாவும் இணைந்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்த விஷயமே. மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த படத்தில் நடிக்க சினேகாவுக்கு அழைப்பு விடுத்த போது கமலுடன் நடிப்பதில் எனக்கு சந்தோசம் தான். ஆனால், அதே அளவிற்கு பயமும் இருக்கிறது.
காரணம் கமலஹாசன் உடன் நடித்தால் லிப்லாக் காட்சி போன்றவை இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதற்கு படக்குழுவினர் நிச்சயமாக அதுபோன்ற காட்சிகள் இந்த படத்தில் கிடையாது என உறுதியாக கூறியதை அடுத்த தான் சினேகா வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமிட் ஆகியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் சில்வண்டு சிக்கும் சினேகா சிக்காதுல என்பது போல கருத்துக்களை கமெண்ட்களில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.