கமல் மாதிரி ஒரு மோசமான ஆள என் வாழ்க்கையிலேயே பாத்ததில்ல : தாடி பாலாஜி மனைவி பகீர் தகவல்..!
Author: Rajesh2 April 2022, 4:46 pm
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர், தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். அவ்வப்போது சினிமாவில் நடித்தும், கட்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தனியார் தொலைக்காட்சியில், பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதில் , இரண்டாவது சீசனில் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் இருவரும் சேர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடைசி நாளில் அவர்கள் சேர்வது போல காட்டப்பட்டது.
ஆனால் அவர்கள் இடையே பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி, தனது மகளை தவறாக வழிநடத்துகிறார். அதனால் படிப்பு பாதிக்கிறத எனச் சொல்லி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது குழந்தையை மீட்டுத் தரும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து நிருபர் ஒருவர், தாடி பாலாஜி மனைவி நித்யாவிடம் பேசியுள்ளார். அப்போது அவர் பாலாஜி போல தான் மீடியாவுக்கு வர மாட்டேன் என கூறியுள்ளார். மேலும், அந்த நிருபர் கமல் உங்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தார் என நதியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு கம ‘கமலை போல ஒரு ஒர்ஸ்ட் கேரக்டர் நான் என் வாழ்க்கையிலேயே பார்த்ததே இல்லை என்றும் அவரை பற்றி பேசினால் நிறைய கன்டென்ட் வெளியில் விட்டுவிடுவேன் எனவும் அவர் கூறி இருப்பது போன்ற ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.