சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக சிம்புவை களமிறக்கும் கமல்: இவ்ளோ பெரிய பிளானா..?
Author: Rajesh12 March 2023, 1:30 pm
தமிழ் சினிமாவில் சிவாஜி – எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின் உருவான பெரும் நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் – கமல்ஹாசன். 80ஸ் களில் ஆரம்பித்த இவர்களது பயணம் இன்று பல இளம் நடிகர்கள் வந்த பின்பும் இவர்கள் இடத்தை மாற்ற முடியாத அளவிற்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்றும் இன்றைய இளம் தலைமுறையினருக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருவரும் திகழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்குள் தொழில் ரீதியாக போட்டி இருந்து வந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருவரும் பொது மேடைகளில் கட்டி அணைத்து புகழ்ந்து கொள்வது வழக்கம். இதைப்பற்றி பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு பேசியபோது, ‘கமலுக்கு விக்ரம் படம் மாபெரும் வெற்றி வாகை சூடியதை போல, நாமும் ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என ரஜினி நினைக்கிறார்.

அதனால் தான் நடித்து வரும் ஜெய்லர் திரைப்படத்திற்காக மிகவும் மெனக்கிடுகிறார்’ என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரஜினிக்காக சொல்லப்பட்ட கதையில் தான் தற்போது சிம்பு நடிக்க கமல் தயாரிக்க போகிறார் என்று கூறினார். அதாவது தேசிங்கு பெரியசாமி ரஜினிக்காக சொன்ன கதை தான் சிம்புவுக்கு வந்துள்ளதாம்.

ரஜினியே வேண்டாம் என்று சொன்ன கதையை கமல் தேர்ந்தெடுத்து எப்படி தன் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார் என்று கேள்விகள் எழுந்தன. கமல் இப்படி செய்கிறார் என்றால் அதில் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். சூப்பர் ஸ்டாரை எதிர்த்து லிட்டில் சூப்பர் ஸ்டாரை கமல் களம் இறக்குகிறார். இது கமலுக்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் ஒரு வித போட்டிதான் என்றும் செய்யாறு பாலு கூறினார்.