உங்க காலில் விழந்தால் கூட தப்பில்லை.. ரஜினியின் 33 வருட ரகசியத்தை மறைத்து வந்த கமல்..!

Author: Vignesh
22 August 2023, 4:00 pm

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி கமல். இருவரும் நடிப்பை தாண்டி சிறந்த நண்பர்களாகவும் இருந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் ஏதாவது ஒரு முடிவை எடுக்க கமலிடம் சொல்லி தீர்வு கண்டபின் தான் முடிவு எடுப்பாராம்.

அப்படி ஒரு நம்பிக்கையை கமலஹாசனிடம் வைத்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

rajini kamal-updatenews360

இதற்கான விளக்கமும் ரஜினிகாந்த் கூறிய நிலையில், ஒரு காலத்தில் கமல் காலில் விழப்போன ரஜினி என்ற தகவலும், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, வயதில் சிறியவராக இருந்தாலும் நல்ல விஷயம் செய்தவரை பாராட்ட வேண்டும் என்றும், அவர்கள் காலில் விழுவது கூட தப்பில்லை என்றும் கூறியிருந்தார்.

rajini kamal

இந்த நிலையில், 33 வருடத்திற்கு முன் கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரவு 11 மணிக்கு பட குழுவினர் போட்டு காட்டியுள்ளனர். இந்த படத்தை பார்த்து பூரித்துப்போன நடிகர் ரஜினிகாந்த் நள்ளிரவில் இரண்டு மணிக்கு காரில் கமல் வீட்டிற்கு சென்றிருந்தார்.

rajini kamal - updatenews360

அப்போது, பாராட்ட நள்ளிரவுக்கு சென்ற ரஜினி கமலை பார்த்து உங்க காலில் விழுந்தால் கூட தப்பில்லை என்று சொல்லி காலில் விழச்சென்றாராம். அப்புவாக நடித்ததை நினைத்து பூரித்து போன ரஜினி, எப்படி நடிக்க முடிந்தது என்று கமலிடம் கேட்டிருக்கிறார்.

kamal-updatenews360

கமலும் மலுப்பலாய் பதிலளித்துள்ளார். இந்த ரகசியத்தை கமல் ரஜினி யாரிடமும் கூறாமல் மறைத்து வருகின்றனர். அப்படித்தான் பார்க்கும் படம் சிறப்பாக இருந்தால் கூட உடனே அந்த படக் குழுவினரை சந்தித்தோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ பாராட்டும் மனமுள்ளவர் ரஜினி என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தான் ஆதித்யநாத் ஒரு சன்யாசி என்பதால் காலில் விழுந்தேன் என்று ஓபனாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 543

    0

    0