இது ரொம்ப தப்பு ஆண்டவரே…. முதல் மனைவி பற்றி அசிங்கமாக அந்த வார்த்தை சொன்ன கமல்!

Author:
6 September 2024, 12:07 pm

உலக நாயகன் கமலஹாசன் திரைப்பட நடிகராகவும் அரசியல்வாதியாகவும் தற்போது இருந்து வருகிறார். முன்னதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் மிகப்பெரிய அளவில் மக்களை கவர்ந்தார்.

குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கை துவங்கிய நடிகர் கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகள், பத்து தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள், ஃபிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்று நடிப்பின் சிகரமாக திகழ்ந்து வருகிறார்.

vani ganapathy kamal

நடிகர் கமல்ஹாசன் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாணி கணபதி பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலாக ரெக்கார்டிங் வீடியோ ஒன்றில் வாணி கணபதியை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அவரை பார்த்தவுடனே காதல் சொல்லி அவரை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அதை எடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1985 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். வாணி கணபதி பிரிந்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தனது மகள் ஸ்ருதி ஹாசன் உடன் கலந்து கொண்டு பேசினார்.

vani ganapathy

அப்போது வாணி கணபதியை பிரிந்த பிறகு என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஹீரோ ஆகிவிட்டது. நான் வாடகை வீட்டிற்கு சென்றேன். வாழ்க்கையின் பல விஷயங்களை புதிதாக கட்டமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் என கமல் கூறியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்த பிரிந்த மனைவியான வாணி கணபதி கமல்ஹாசன் இப்படி சொல்வது மிகப்பெரிய தவறு. ஒரு மிகப்பெரிய நடிகராக இருக்கும் கமல்ஹாசன் ஜீவனாம்சம் கொடுத்ததற்காக அவரது வாழ்க்கையே முடங்கி விட முடியுமா? இது எப்படி நம்ப முடிகிறது?

இது கமல்ஹாசனின் மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது. நான் கமல்ஹாசனின் திறமையும் அவருடைய படைப்பாற்றலையும் மிகவும் மதிக்கிறேன். ஆனால். அதற்காக அவருடன் வாழ்ந்து பிரிந்த மனைவியை பற்றி இப்படி இழிவாக பேசுவது ரொம்ப பெரிய தவறு.

vani ganapathy

என்னைப் பற்றி இழிவாக பேச அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. கிட்டத்தட்ட பத்து வருஷம் நான் அவருடன் வாழ்ந்திருக்கிறேன். அப்போதே நாங்கள் 2 வாடகை வீட்டிற்கு மாறினோம். அப்படி இருக்கும்போது என்னை பிரிந்த பிறகு தான் அவரது வாழ்க்கை மாறிவிட்டது என்றும் என்னைப் பற்றி அவதூறாக கொச்சையாக பொதுவெளியில் வந்து பேசுவதும் மிகவும் மோசமான கமலின் குணத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக கொந்தளித்த வாணி கணபதி.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!