ரஜினியால் பதறிப் போன கமல்… இருந்தாலும் அந்த வார்த்தையை சொல்லி இருக்க கூடாது..!
Author: Vignesh3 February 2024, 12:18 pm
ரஜினி, கமல் 40 ஆண்டுகால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். என்னதான் இவர்களின் படங்களுக்கு இடையில் போட்டிருந்தாலும் இவர்கள் நெருங்கிய நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்று ஒரு பழமொழியை சொல்வார்கள் அப்படித்தான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கமல் மற்றும் ரஜினியை மிரளவிடும் அளவிற்கு சில புதுமுக நடிகர்கள் தமிழ் சினிமாவை களம் இறங்கி இருந்தார்கள்.
உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் 100 நாட்களை தாண்ட சிரமப்பட்டு கொண்டிருக்கும் போது, புதுமுக நடிகர்களின் படங்கள் 200 நாட்களை தாண்டி தியேட்டரில் வெற்றி நடை போட்டு இருக்கிறது. அந்த சமயத்தில், கமலஹாசனிடம் ஒரு நாள் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும்போது சினிமாவில் இருந்து விலகுவதாகவும், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அதற்கு, கமலிடம் யோசனையும் கேட்டுள்ளார். இதனை கேட்டவுடன் பதறிப்போன கமல் இது குறித்து மேடை ஒன்றில் பேசியுள்ளார். அப்போது, இந்த ஆளு ஒரு நாள் வந்து சினிமாவை விட்டு போயிடலாம்னு இருக்கேன் என யோசனை கேட்டார். அதுவும், என்னிடம் வந்து கேட்டார். நீங்கள் சினிமாவை விட்டு போனீங்கன்னா என்னையும் போக சொல்லுவாங்க என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க ரஜினி என கமல் கூறியதாக தெரிவித்துள்ளார்.