இளமை திரும்புதே.. ஜம்முன்னு மாஸ் காட்டும் கமல்.. பின்னால் இருந்து சாவி கொடுக்கும் நடிகரின் மனைவி..!

Author: Vignesh
10 April 2023, 12:30 pm

90ஸ், 80ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஹெச். வினோத், மணிரத்னம், பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

kamal - updatenews360 4

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக அ. வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்கு பின் துவங்கும் என கூறப்படுகிறது.

kamal-updatenews360

வயசானாலும் ஸ்டைலும், அழகும் உன்ன விட்டு போகல என்ற டயலாக் இப்போது கமலுக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் 68 வயதிலும் அவர் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக ஜம்முன்னு இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

kamal-updatenews360

அந்த வகையில் தற்போது கமல் கலந்து கொள்ளும் பொது விழாக்கள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என அனைத்திலும் அட்டகாசமாக உடை அணிந்து கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவருடைய உடைகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் அந்த நிகழ்ச்சியில் கமல் வாரா வாரம் வித விதமான கதர் உடைகளை அணிந்து வருவார். கதர் உடையில் இப்படி கூட இருக்குமா என ரசிகர்கள் வாய்பிளக்கும் அளவுக்கு இருக்கிறது.

kamal-updatenews360

இதற்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. அதே போன்று கமல் அவருடைய உடைகளில் ஒரு நேர்த்தியும், ஸ்டைலும் இருக்கும். அதுதான் அவரை இந்த வயதிலும் கெத்தாக காட்டுவது. இப்படி பலரும் வியக்கும் வகையில் கமலின் விதவிதமாக உடை அணிவதற்கு பின்னால் ஒரு நடிகரின் மனைவிதான் இருக்கிறாராம்.

kamal-updatenews360

அதாவது இப்போது கமலுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் அமிர்தா ராம். இவர் வேறு யாரும் கிடையாது பல திரைப்படங்கள், சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் ராம்ஜியின் மனைவி தான்.

இவர் டிசைன் செய்து தரும் உடைகளை அணிந்து கொண்டு தான் உலக நாயகன் இப்போது மாஸ் காட்டிக் கொண்டு வருகிறார்.

kamal-updatenews360

அதன் மூலம் அவர் புது ட்ரெண்டையும் உருவாக்கி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கமல் அந்த உடைகளில் மிக இளமையாக தெரிகிறார் என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் அமிர்தா தான் காஸ்டியூம் டிசைனராக இருக்கிறாராம்.

kamal-updatenews360

அதனாலேயே அந்த படத்தில் கமலின் தோற்றம் குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கு நாம் இன்னும் சில காலம் பொறுத்து தான் இருக்க வேண்டும். அந்த வகையில் அமிர்தா ராம் உலக நாயகனுக்கு மட்டுமல்லாமல் பல செலிபிரிட்டிகளுக்கும் காஸ்டியூம் டிசைனராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 578

    0

    0