13 வருஷம் பழகிட்டு காசு கொடுக்காத கமல்… மனம் நொந்து போன கவுதமி!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2023, 5:30 pm

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்ற பெயரோடு கொடிக் கட்டி பறந்து வருபவர் கமல்ஹாசன். பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். சர்ச்சைகளை தாண்டி திரையுலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

2 முறை நடிககைகளை திருமணம் செய்து தோல்வி கண்ட கமல், அவர்களை பிரிந்த பின் பல நடிகைகளுடன் சர்ச்சைகளில் சிக்கினார்.

அவருடன் 13 வருடம் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்த நடிகை கவுதமி. தேர்வமகன் நம்மவர் உள்ளிட்ட படங்களில் நடித்த பின் சில காலம் ஒரே வீட்டில் வசித்தனர்.

அப்போது விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் பிஸியாக நடித்த போது கமல் ஹாசனை பிரிவதாக கெளதமி பேட்டிக்கொடுத்து அறிவித்தார். தன் மகளின் எதிர்காலத்தின் நன்மைக்காத் தான் பிரிகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். பாபநாசம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது அவரை பிரிந்ததற்கான 3 காரணங்கள் வெளியாகியுள்ளது. கமலை பிரிவதற்கு முன் கெளதமிக்கு சுயமரியாதை கிடைக்காமல் அதை இழந்ததால் மனம் நொந்து இருக்கிறார். மேலும் கமல் ஹாசனுக்கு ஆடைவடிவமைப்பாளராக பல படங்களில் வேலை செய்திருந்தார் கெளதமி.

அப்படி தசவதாரம் மற்றும் விஸ்வரூபம் படத்தில் வேலை செய்ததற்கான சம்பளத்தை கெளதமிக்கு கொடுக்கவில்லையாம். அதைவிட பிரிவதற்கு முன் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் மனம் ஒத்து வாழமுடியாமல் தான் பிரிந்திருக்கிறார் கமல் ஹாசன்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 954

    8

    3