சந்தோஷப்பட்டதே அந்த ஒரு விஷயத்திற்காக தான்.. மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்து நடிகர் கமலேஷ் பேட்டி..!
Author: Vignesh15 September 2023, 9:34 am
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். இதனிடையே நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி காலை சீரியல் ஒன்றிற்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவரது மரணம் யாராலும் ஏறுகொளவே முடியவில்லை.
அவருடன் நடித்த நடிகர் நடிகைகள் அந்த கவலையில் இருந்து இன்னும் மீண்டு வரவே இல்லை. மாரிமுத்துவின் மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கேரக்டரை யாராலும் நிரப்பவே முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மாரிமுத்துவுடன் நடித்த நடிகர் கமலேஷ் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது மாரிமுத்து அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அதன் மூலம் அவர் மிகவும் பிரபலமாகவும், அவரை வைத்து வந்த மீம்ஸ் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.