அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே, பல படங்களில் கவுண்டமணியின் வசனம் காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்ந்து தான் இருக்கும். மேலும் உருவ கேலி செய்வது, மட்டம் தட்டும் விதமான வசங்களை சேர்த்து கவுண்டமணி பேசுவது வழக்கம். அவரின் காமெடியை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது போல் ரியல் வாழ்க்கையிலும் அவரது ஹூமர் சென்ஸ் நன்றாக இருக்குமாம்.
இவர், பெரும்பாலும் சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிட்டும் நடிக்கவும் செய்து வந்திருக்கிறார். கவுண்டமணியின் காமெடிக்கு ரஜினிகாந்த், பிரபு கூட தன்னை மறந்து சிரித்து விடுவார்களாம்.
ஆனால், கவுண்டமணி ஒருமையில் பேசும் பேச்சு உலகநாயகன் கமல் ஹாசனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. அப்படி ஆரம்பத்தில் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.
இதனிடையே, இந்தியன் படத்திற்கு பின் இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. இதற்கு காரணம் கவுண்டமணி வசனங்களும் கவுண்டர் அடுக்கும் விதமும் கமல் ஹாசனுக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. ஆனால் கமல் ஹாசன் இப்படி நினைத்துக்கொண்டதை நினைத்து கவுண்டமணி ஒரு விசயமாக எடுத்துக்கொண்டதே கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.