சூப்பர் ஸ்டாரை மிரட்ட வரும் கமல்.. வில்லனாக நடிக்க சம்பளம் மட்டும் 150 கோடியாம்..!

Author: Vignesh
31 May 2023, 11:01 am

கடந்த ஐந்து தசாப்தங்களில் மிக உயர்ந்த இந்திய நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மூலம் ஒரு பெரிய சாதனையை செய்து உள்ளார். அனிருத் இசையில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில், சூர்யா இணைந்து நடித்த இந்த படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

vikram-updatenews360

தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பில் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டி இருக்கிறார். அதன் பிறகு கமல் எச்.வினோத் இயக்கத்தில் ‘KH 233’ மற்றும் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘KH 234’ இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இடையில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் பான் இந்தியன் படமான ‘ப்ராஜெக்ட் கே’ இல் கமல் முக்கிய வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

indian 2_updatenews360

நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

project k updatenews360

மேலும், வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பாளர் அஸ்வினி தத், இந்த படத்தில் கமல் மட்டுமே வில்லன் கேரக்டரை செய்ய முடியும் என்று கருதியதாகவும், மேலும், 150 கோடி சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கும் பெரும் தொகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

kamal-updatenews360

இதனிடையே, இந்த படத்தில் சூர்யா, மகேஷ் பாபு, திஷா பதானி ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், தனது மற்ற படங்களுக்கும் ‘பிக் பாஸ் தமிழ் 7’ படத்திற்கும் இடையே ஒரே நேரத்தில் அதை முடித்துவிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 680

    5

    0