மீண்டும் ‘மருதநாயகம்’..? துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கமல்ஹாசனின் கனவுப்படம்..!

Author: Vignesh
22 December 2022, 1:15 pm

கமல்ஹாசனின் கனவு திரைபடமான ‘மருதநாயகம்’ படத்தை இயக்கி, நடித்து, தயாரிக்க திட்டமிட்டு, தொடக்க விழாவை கமல்ஹாசன் மிக பிரமாண்டமாக நடத்தினார். இந்தப் படம் தொடர்பான வீடியோக்கள் இப்போதும் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

maruthanayagam - updatenews360

‘மருதநாயகம்’ படம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதும் தெரியாமலேயே இருக்கிறது. அவ்வப்போது இந்தப் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகும். ஆனால், அடுத்த கட்டத்துக்கு ‘மருதநாயகம்’ படம் நகரவே இல்லை. இது கமலின் கனவுப்படம் என்பதால், எப்படியாவது இதனை எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் இருந்து வந்தார்.

இதனிடையே, ஒரு நிகழ்சியில் பேசிய கமல்ஹாசன் சதாம் உசேனை அழிக்க இப்போ America எவ்ளோ செலவு பண்ணங்களோ அதுக்கு நிகரான செலவை 1757-1764 மருதநாயகத்தை அழிக்க செலவு பண்ணிருக்காங்க என்றும்,
பண்ண முடியாம போனாலும் இங்க பதிவு பண்றேன் என பேசிய பழைய வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 597

    4

    0