கஷ்டத்தில் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி….கை கொடுக்கும் சின்னத்திரை..!
Author: Selvan16 November 2024, 10:03 pm
நடிகை கௌதமி சில காலம் கமலுடன் திருமணம் பண்ணாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.இவர்கள் இருவர் நடிப்பில் தமிழில் பாபநாசம் படம் வெளிவந்தது. பாபநாசம் 2 எடுக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அரசியல் பயணம்
25 ஆண்டுகளாக நடிகை கௌதமி பாஜகவில் நிர்வாகியாக இருந்த போது பாஜக பிரமுகர் அழகப்பன் கூட நட்பாக பழக தொடங்கினார். அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவருக்கு பாஜாக மூத்த நிர்வாகிகள் உதவி செய்தும் வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி அழகப்பன் மீது வழக்கு கொடுத்து கட்சியில் இருந்து விலகினார். 2024 இல் இருந்து அ.தி.மு.க கட்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இணைந்து கொண்டார்.
இதையும் படியுங்க: தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா…திடீர் திருப்பம்..!
சின்னத்திரை என்ட்ரி
இந்த நிலையில் நடிகை கௌதமியின் சின்னத்திரை என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது.ஜீ தமிழில் சேனலில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கில்லாதே தொடரில் நடிகை கௌதமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சின்னத்திரை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.