ப்பாஹ் என்ன அழகு…. கமல் ஹாசனின் முதல் மனைவியா இது…? சுஹாசினி வெளியிட்ட புகைப்படம்!

Author: Shree
7 June 2023, 4:54 pm

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.

அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிம்ரன், நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை சுஹாசினி திருமணம் ஒன்றில் தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என கூறி வெளியிட்டுள்ளார். அதில் கமல் ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியும் கலந்துக்கொண்டிருக்கிறார். பெரிய கண்களுக்கு மைதீட்டி இன்னும் அதே அழகோடு இருக்கிறாரே என கமலின் முதல் மனைவி வாணி கணபதியை பார்த்து ஷாக்காகி புகழந்துள்ளனர் ரசிகர்கள்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu