சீனாவில் சிவகார்த்திகேயன் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு : வசூலை குவித்த கனா திரைப்படம்..!
Author: Rajesh22 March 2022, 11:54 am
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கனா. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
பலருக்கு உத்வேதமாக அமைந்த அப்படம் பாராட்டுகளைக் குவித்தது. சிவகார்த்திகேயன் அந்தப் படத்தைத் தயாரித்ததோடு சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் சீனா மொழியில் டப் செய்யப்பட்டு திரையரங்கில் வெளிவந்தது. இந்நிலையில் சீனா பாக்ஸ் ஆபிஸில் கனா திரைப்படம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழை பெண் விளையாட்டுத் துறையில் முன்னேறத் துடிக்கும் கதை அம்சம் கொண்ட திரைப்படத்திற்கு சீனாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் இருந்து டப் செய்யப்பட்டு, சீனா மொழியில் வெளிவந்துள்ள கனா திரைப்படத்திற்கு, இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது மாபெரும் விஷயம் தான். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.