காஞ்சனா படத்துல நடிச்சது என் வாழ்க்கைல நான் செய்த பெரிய தவறு.. திருநங்கை பிரியா கண்ணீர் பேட்டி..!

Author: Rajesh
25 June 2023, 7:15 pm

முனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பேயை மையப்படுத்திய கதை உருவாக்கப்பட்டிருந்தது.

காஞ்சனா முதல் பாகத்தில் ஒரு திருநங்கை தங்கள் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களும், அவர்கள் படும் கஷ்டத்தையும், அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் போன்ற ஒரு நல்ல கருத்தை காட்டியிருப்பார். நடிகர் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பெரும் வலுவாக இருந்தது. இவருக்கு மகள் கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருந்தார்.

இந்நிலையில், திருநங்கை பிரியா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், காஞ்சனா படத்தில் நடித்தது தான் என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. காஞ்சனா படத்திற்கு முன் ஒரு நார்மலான திருநங்கை வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருந்தேன். காஞ்சனா படத்தில் நடித்ததால் கோடி கோடியாக நான் பணம் சம்பாதித்துவிட்டேன் என பலர் நினைக்கிறார்கள்.

ஆனால், அந்த படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. வேறு வேலை எதுவும் பார்க்க முடியவில்லை. நம்மை ஏற்றிவிட சிலர் பேர் இருந்தாலும், கையை பிடித்து இழுத்துவிட சிலர் இருக்கிறார்கள் என திருநங்கை பிரியா கண்ணீருடன் பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1018

    3

    6