அசிங்க அசிங்க திட்டுவாரு.. கனகாவின் மோசமான நிலைக்கு காரணமே இவங்க தானா?.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

Author: Vignesh
18 June 2024, 12:27 pm
kanaka
Quick Share

80 காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார். இவர், தமிழில் முன்னாடி நடிகர்களுடன் நடித்து அசத்திருந்தார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள்தான் கனகா. தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் அன்பினால் வளர்க்கப்பட்ட கனகாவிற்கு கரகாட்டக்காரன் படம் தான் மிகவும் புகழை வாங்கி கொடுத்தது.

kanaka-updatenews360

திடீரென இவரது தாயார் உயிரிழந்த நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் கனகா தவித்து வந்தார். தந்தையுடன் சொத்து பிரச்சனையால் தகராறு செய்தும் வந்தார். இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்து வந்த கனகா நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

kanaka-updatenews360

மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!

இந்நிலையில், பாழடைந்த வீட்டில் பூட்டப்பட்ட கதவுகளை திறக்காமல் வீட்டிலேயே இருந்த கனகா எப்போது வெளியே வருகின்றார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் பலர் இருந்தனர். சமீபத்தில், நடிகை குட்டி பத்மினி அவரது வீட்டருகே காத்திருந்து ஒருநாள் கனகாவை பார்த்ததுடன் அவருடன் புகைப்படமும் எடுத்து வெளியிட்டார்.

kanaga

இப்படி ஒரு நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கனகாவின் இந்த நிலைமைக்கு காரணமே அவரது பெற்றோர்கள் தான். கனகாவை அவரது அப்பா கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். பதிலுக்கு கனகாவும் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பச்சை பச்சையாக கேட்பார்.

kanaga-updatenews360

மேலும், ஷூட்டிங் முடிந்தவுடன் எங்கேயும் செல்லக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு அவருக்கு நெருக்கடியும் கொடுத்தார் கனகாவின் அம்மா. அவருக்கு இது மன அழுத்தத்தை கொடுத்தது, ஒரு நடிகரை திருமணம் செய்ய விருந்தார் கனகா. ஆனால், கடைசியில் தன்னுடைய அப்பா போல் தான் இருப்பார் என்கிற எண்ணத்தால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டார். தனிமையில், இருந்த கனகா தற்போது தனிமையே தனக்கு துணை என தேர்ந்தெடுத்து விட்டார் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

Views: - 94

0

0

Leave a Reply