ரூ.80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு கொடுத்துட்டாங்க.. சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா?..

Author: Vignesh
8 June 2024, 3:15 pm

பழம் பெரும் நடிகையான காஞ்சனா காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானார். இதில், முத்துராமனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில், ரவிச்சந்திரன் பாலைய்யா, நாகேஷ், சச்சு, விஎஸ் ராகவன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்களை நடிக்க இந்த திரைப்படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.

மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்போதைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கும் ஒரு படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தில், கதாநாயகியாக நடித்த காஞ்சனா குறித்து சில தகவல்களை தற்போது பேட்டியில் பயில்வான் தெரிவித்து இருக்கிறார். அது, பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நடிகை காஞ்சனாவுக்கு கலர் படம் காஞ்சனா என்று அன்று ஒரு பெயர் இருந்ததாம். எம்ஜிஆர் சிவாஜி நடித்த பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தவர். சிவாஜிக்கும் ஜோடியாக நடித்த இவர் ஜெமினி கணேசன் ஜோடியாகவும் நடித்து உள்ளார்.

மேலும் படிக்க: அட ஆச்சரியமா இருக்கே.. காஞ்சனா 4-ல்இவங்கதான் ஹீரோயினா?.. வைரல் பதிவு..!

அதன் பின்னர், ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். துவக்கத்தில், விமான பணிப்பெண்ணாக அதாவது ஹார்வெஸ்ட்ர்ராக இருந்த காஞ்சனா அவரது அழகையும், உடல் அமைப்பையும் கண்டு டைரக்டர் ஸ்ரீதர் அவருக்கு காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அளித்தார். அந்த படத்தில், தான் காஞ்சனா அறிமுகமானவர். நடிப்பில், கொடிகட்டி பறந்த காஞ்சனா ஒரு மில் அதிபருக்கு மனைவியானார்.

ஒரு கட்டத்தில், அவரது சொத்துக்கள் எல்லாம் பறிபோனது. அவர் சொந்தக்காரர்ளே காஞ்சனாவின் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டனர். இது குறித்து காஞ்சனா கோர்ட்டில் வழக்கு போட்டார். வழக்கிலும் ஜெயித்தார் வழக்கு தொடர்ந்த நேரத்தில், காஞ்சனா மிகவும் கஷ்டத்தில் இருந்தார். வறுமையில் இருந்தார் அப்போது, அவர் கோவிலில் பணி செய்தார். சமூக சேவைகளை செய்து கோவில்களில் தன் பசியாற்றினார். அதன் பிறகு கோடிக்கணக்கான சொத்துக்கள் அவருக்கு திரும்ப வந்து சேர்ந்தது. மீண்டும் அந்த சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு பெண் சாமியாராக வாழ்ந்தவர் தான் கலர் பட நாயகி கனவு நாயகி காஞ்சனா என்று அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?