200 வருட பழமை புத்தகம்; படமாக்கிய ராஜிவ்மேனன்; ஆச்சரியப்பட்ட உலக அழகி,..
Author: Sudha7 July 2024, 5:29 pm
1811 ஆம் ஆண்டு பிரபலமான ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் அவர்களால் எழுதப்பட்டது சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி என்கிற நாவல்.அந்த காலத்து ஆங்கிலேய பாரம்பரியம் அதன் கௌரவம் இவற்றை படம் பிடித்து காட்டுவதாக அமைந்திருந்தது.இந்த நாவல் பலமுறை திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்துள்ளது
சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம் அதே பெயரில் 1995 இல் வெளிவந்த “சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி ” டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற கேட் வின்ஸ்லேட் இந்த திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
200 ஆண்டு பழமையான இந்த நாவலை மையமாக கொண்டு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ராஜுமேனன் இயக்கத்தில் வெளிவந்தது. நாவல் வெளிவந்து 200 ஆண்டுகள் கழித்தும் கூட நாவலின் சுவையை படத்தில் தந்திருந்தார் இயக்குனர்.மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தமிழின் முன்னணி ஹீரோ அஜித், உலக அழகி ஐஸ்வர்யா ராய், தபு அப்பாஸ் போன்றோர் நடித்திருந்தனர்.
கதைக்காகவும் பாடல்களுக்காகவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது மெல்லிய காதல், மூன்று பெண்களின் உணர்வு ஆகியவற்றை மிக அழகாக சொல்லும் கதையாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது.