அந்த விஷயத்தில் தனுசு கில்லாடி.. நோ சொல்ல என்னால் முடியாது.. – பிரபல பாலிவுட் நடிகை ஓபன் டாக்..!
Author: Vignesh13 June 2023, 6:24 pm
பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. கங்கனா தற்போது சந்திரமுகி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், தனுஷ் டி50 படத்தில் நடிக்க கேட்டதற்கு கங்கனா ரனாவத் நோ சொல்லிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. இதனிடையே, இதுகுறித்து பேசிய கங்கனா, இது பொய்யான செய்தி என்றும், அது போன்று எந்த பட வாய்ப்பும் தன்னை தேடி வரவில்லை எனவும், தனுஷ் இஸ் மை fab, அவர் நடிப்பில் கில்லாடி என்றும், அவருக்கு தன்னால் நோ சொல்லவே முடியாது என தெரிவித்துள்ளார்.
தனுஷின் டி50 படத்தில் விஷ்ணு விஷாலும், எஸ்.ஜே. சூர்யாவும் அவரின் சகோதரர்களாக நடிப்பதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.