பட்டுசேலையில் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும் கங்கனா – லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்!

Author: Rajesh
10 February 2024, 1:48 pm

பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திறமையின் மூலம் மட்டுமே முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். தமிழில் ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

ஆனால், பாலிவுட்டில் ஆளுமை படைத்தது வரும் பல வாரிசு நடிகர், நடிகைகளின் சதி செயல்களால் அவரை தொழில் ரீதியாக திட்டமிட்டு கெடுத்து வருகிறார். இதனை அறிந்த கங்கனா மீடியாக்களில் வெளிப்படையாக நேபோட்டிசம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால் கரண் ஜோகர் , பட் குடும்பம் உள்ளிட்டவர்கள் கடுங்கோபத்திற்கு ஆளாகினர்.

கங்கனா பாலிவுட்டின் பிரபல நட்சத்திர நடிகரான ரித்திக் ரோஷனை காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார். பின்னர் சில வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்துவிட்டார். ரித்திக் ரோஷனுடன் இருக்கும் வரை அவர் பாதுகாப்பாக இருந்தார். அவரை பிரிந்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் சர்ச்சையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து நியாமான கருத்தை கூறுவார். இதனாலே பாலிவுட் பிரபலங்கள் இதுவரை எதிர்த்தாலும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பட்டு சேலை அணிந்து பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!