ஐயோ! ஆள விடு சாமி… கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த “அனிமல்” இயக்குனருக்கு கும்பிடு போட்ட கங்கனா!
Author: Rajesh7 February 2024, 7:13 pm
பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திறமையின் மூலம் மட்டுமே முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். தமிழில் ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

ஆனால், பாலிவுட்டில் ஆளுமை படைத்தது வரும் பல வாரிசு நடிகர், நடிகைகளின் சதி செயல்களால் அவரை தொழில் ரீதியாக திட்டமிட்டு கெடுத்து வருகிறார். இதனை அறிந்த கங்கனா மீடியாக்களில் வெளிப்படையாக நேபோட்டிசம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால் கரண் ஜோகர் , பட் குடும்பம் உள்ளிட்டவர்கள் கடுங்கோபத்திற்கு ஆளாகினர்.
கங்கனா பாலிவுட்டின் பிரபல நட்சத்திர நடிகரான ரித்திக் ரோஷனை காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார். பின்னர் சில வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்துவிட்டார். ரித்திக் ரோஷனுடன் இருக்கும் வரை அவர் பாதுகாப்பாக இருந்தார். அவரை பிரிந்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் சர்ச்சையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் கங்கனா ரனாவத் தற்ப்போது அனிமல் பி[படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவை நேருக்கு நேர் விளாசித்தள்ளியுள்ளார்.
ஆம், ஆணாதிக்கம் நிறைந்த அனிமல் படத்தை சில நாட்களுக்கு முன்னர் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்து தள்ளியிருந்தார். கங்கானாவின் இந்த பேச்சு குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிமல் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவிடம் கேள்வி எழுப்பியதற்கு, “நடிகை கங்கனா ரனாவத் திறமையான நடிகைகளில் ஒருவர். அவர் எனது படத்தை விமர்சித்திருப்பதால் எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லை. எதிர்காலத்தில் நான் இயக்கப்போகும் படத்தில் கங்கனா ரணாவத்தை நிச்சயம் நடிக்க வைப்பேன்” என்று கூறினார்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த நடிகை கங்கனா ரனாவத், ” ஐயோ…! தயவு செய்து உங்களின் படங்களில் என்னை நடிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். உங்கள் படத்தில் என்னை நடிக்க வைத்தால் ஆணாதிக்கவாதிகளாக நடிக்கும் ஹீரோக்கள் பெண்களை போற்றுபவர்களாக மாறிவிடுவார்கள்.அந்த அளவிற்கு என் கருத்து சாயலில் படம் மாறிவிடும். அது உங்களுக்கு நல்லதல்ல என தக்க பதிலடி கொடுத்துள்ளார். கங்கனாவின் இந்த கருத்திற்கு அவரது ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.