என் திருமணத்திற்கு நீ வராதே… கங்கனாவிடம் கூறிய ஆனந்த் அம்பானி – ஏன் தெரியுமா?

Author:
26 August 2024, 4:22 pm

இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளமகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த திருமணத்தில் வேற ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா, அட்லீ , அலியா பட் , பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு இருந்தனர். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் எல்லோருக்கும் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கை கடிகாரம் பரிசாக கொடுக்கப்பட்டது.

இந்த திருமணம் செய்தி தான் கடந்த மாதம் முழுக்க சமூக வலைதளங்கள் செய்தித்தாள்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். அதாவது ஆனந்த் அம்பானி என்னுடைய திருமணத்திற்கு வர வேண்டாம் என நேரடியாக என்னிடம் கூறினார் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

kangana ranaut

அதைப் பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அதே நாளில் என்னுடைய தம்பியின் திருமணம் நடைபெற இருந்ததால் அவரது அழைப்புக்கு என்னால் வர முடியவில்லை. இதற்கு திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று நான் அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர் உடனே என் நிலைமையை புரிந்து கொண்டு நீங்கள் வர வேண்டாம் எனக் கூறினார் என கங்கானா பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் பேசிய அவர் நான் பிரபலங்களின் திருமணத்தில் கலந்து கொள்ள கூடாது என்ற முடிவில் உள்ளேன். என்றும் ஆனால் அனந்த அம்பானி மற்றும் ராதிகா ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?