தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் படங்களுக்கே தலைவர் ” சந்திரமுகி’ படம் தான். 2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மரணபீதியிலும் மகழ்ச்சி அடையவைத்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
அதிக பொருட்செலவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளிடையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவித்தது படக்குழு. அதன்படி இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களை குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவின் தோற்றத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் கங்கனா முழுசா சந்திரமுகியாக மாறியிருக்கும் தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கங்கனாவின் சந்திரமுகி ஆட்டத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் வெயிட்டிங்…!
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.