கலாச்சாரத்தில் வேரூன்றியவர்கள் தென்னிந்திய நடிகர்கள் – கங்கனா ரனாவத் ..!
Author: Rajesh25 January 2022, 1:58 pm
தென்னிந்திய நடிகர்களை இந்தி திரையுலகம் இன்று வரை மதிப்பதில்லை என்ற கருத்து இதுவரை உள்ளது. இதனிடையே, ‘பாகுபலி’ ‘கேஜிஎப்’ மூலமாக நடிகர்கள் யஷ், பிரபாஸ், வடக்கில் தங்களுக்கென தனி மார்க்கெட்டை தற்போது உருவாக்கியுள்ளனர். இவர்கள் வரிசையில் ‘புஷ்பா’ திரைப்படத்தின் மூலமாக அல்லு அர்ஜுன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், தென்னிந்திய நடிகர் என்றாலே கலாச்சாரத்தில் வேரூன்றியவர்கள் என்றும் அவர்கள் தங்களின் குடும்பத்தினரை நேசிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னிந்திய நடிகர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தொழிலில் காட்டும் ஆர்வமும் ஈடு இணையற்றதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ள கருத்து இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.