ரஜினி, விஜய்யை முந்திய சூர்யா : அப்போ ரூ.1000 கோடி அசால்ட்டா?
Author: Udayachandran RadhaKrishnan12 November 2024, 12:12 pm
தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகராக உயர்ந்துள்ளார் சூர்யா. தமிழ்நாட்டில் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் கூட்டம் உண்டு.
சூர்யாவின் கை ஓங்கியது
தற்போது தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கு பேசும் மாநிலங்களில் சூர்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தமிழ்நாட்டை விட தெலுங்கு மாநிலங்களில் சூர்யாவின் கை ஓங்கியுள்ளது. கங்குவா படத்தின் திரையரங்க உரிமை புதிய சாதனையை படைத்துள்ளது.
விஜய், ரஜினியை முந்திய சூர்யா
ஓடிடியின் படி, கங்குவா தெலுங்கு திரையரங்க உரிமைகள் ரூ.25 கோடிக்கு விற்பனையானது. மேலும் 2024ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களான விஜய்யின் கோட் (GOAT ரூ.17 கோடி) மற்றும் ரஜினியின் வேட்டையன் (ரூ.16 கோடி) படத்தை முந்தியுள்ளது.
இதையும் படியுங்க: விவாகரத்து ஆனாலும் விடமாட்டேன்.. விடாமல் துரத்திய பிரசாந்த் பட நடிகை!
இதன் மூலம் தெலுங்கிய சூர்யா தனது ரசிகர் பலத்தை நிரூபித்துள்ளார். கங்குவா நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், பட வெளியீட்டு முன்னரே வியாபாரம் களைகட்டியுள்ளது.
படம் வெளியாகும் முன்னரே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கங்குவா ரூ.1000 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.