விஜய், ரஜினியை முந்திய கங்குவா.. இது லிஸ்டுலயே இல்லையே!
Author: Udayachandran RadhaKrishnan15 November 2024, 10:57 am
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கங்குவா படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறியது.
உச்சக்கட்ட பேச்சு
குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சூர்யாவின் பேச்சு தான் காரணமாக அமைந்தது.
படம் நிச்சயம் ₹2000 கோடி வசூல் செய்யும் என்றும், அதற்கான ஜிஎஸ்டி ஆவணங்களை நான் பதிவு செய்வேன் என தயாரிப்பாளர் அதிரடியாக அறிவித்தார்.
இதையும் படியுங்க: ஒல்லி ஒல்லி இடுப்பே.. ஒட்டியாணம் எதுக்கு : மிரள வைத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்!
இதைத் தவிர நடிகர் சூர்யா பேசும் போது, நிச்சயம் இந்த படத்தை பார்த்து ஹாலிவுட்டே வாயை பிளக்கப்போறாங்க என கூறியிருந்தார்.
இத்தனை ஹைப் படத்திற்கு தேவையான என முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
முதல் நாள் வசூல் ₹22 கோடி
படம் முழுவதும் கத்திக்கிட்டே இருக்காங்க என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. Cg, VFX, இசை என நெகட்டிவ் ரிவ்யூஸ் றெக்க கட்டி பறந்தன. 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என அடித்து கூறிய படக்குழுவுக்கு முதல் நாள் வசூல் அதிர்ச்சி அளித்திருக்கிறது.
படம் வெறும் 22 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
விஜய், ரஜினியை முந்திய கங்குவா
ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்தியில் வெளியான விஜய்யின் கோட் மற்றும் ரஜினியின் வேட்டையன் திரைப்படங்களை கங்குவா முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் வசூலை கங்குவா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கம் 2 படம் முதல் நாள் 12 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.