காவு வாங்கியதா கங்குவா? படம் ரிலீசுக்கு முன்பே மர்ம மரணம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2024, 10:53 am

நடிகர் சூர்யா – இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 14ல் வெளியாகிறது.

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி படுவேகமாக நடந்து வரும் நிலையில் படத்தொகுப்பாளர் திடீர் மர்ம மரணம் அடைந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

படத்தொப்பாளர் நிஷாத்துக்கு 43 வயதாகிறது. மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இதையும் படியுங்க: அடடே ஜோடி சூப்பரா இருக்கே…. காதலனுடன் மாமன்னன் நடிகை – விரைவில் டும்டும்டும்!

கொச்சி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிஷாத் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தற்கொலையா அல்லது வேறு காரணங்களுக்காக நடந்த கொலையா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே கங்குவா படத்தில் பணியாற்றிய கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில் தற்போது எடிட்டிர் உயிரிழந்துள்ளது கங்குவா காவு வாங்கி வருகிறதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?