தோல்வியில் கங்குவா
சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா.
இப்படம் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியும் பெறவில்லை.படம் ரிலீசுக்கு முன்னதாக படம் 1000 கோடி வசூலை வாரி குவிக்கும் என வாய்க்கு வந்த படி பேசி வந்தனர்.ஆனால் படம் வெளியாகி 3 நாட்கள் மேல் ஆகியும் 50 கோடியை தாண்டவில்லை.இதனால் படக்குழு அனைவரும் தலையில் இடிவிழுந்தது போல் இருக்கின்றனர்.
இதையும் படியுங்க: எப்பவும் நான் தா ராஜா…… என்ன அடிக்க யாராலும் முடியாது..வைரலாகும் இளையராஜா ட்வீட்!
இந்நிலையில் படத்தில் சவுண்ட் சிஸ்டம் சரி இல்லை என்றும்,படத்திற்கு போயிட்டு வந்தால் காது பஞ்சர் ஆகிரும் என்றும் கிண்டல் அடித்து வந்தனர்.
ஜோதிகாவின் கருத்து
தற்போது நடிகை ஜோதிகா கங்குவா படத்தின் விமர்சனங்களுக்கு கோவமாக பதிலடி கொடுத்துள்ளார்.படத்தின் முதல் அரைமணி நேரம் மட்டுமே அதிக ஒலி தொந்தரவு தரும் விதத்தில் இருந்தது .3 மணி நேரத்தில் அரைமணிநேரம் தா உங்க பிரச்சனையா..முதல் காட்சி முடியும் முன்பே ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் வருகிறது.
இது எல்லாம் திட்டமிட்ட சதி போல் இருக்கிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை அவருடைய இன்ஸ்டா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.