கங்குவா படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது? இதுதானா?
Author: Udayachandran RadhaKrishnan11 November 2024, 12:07 pm
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உள்ளதாக சூர்யா அடிக்கடி கூறி வருகிறார். கங்குவா ரூ.1000 கோடி வசூல் செய்யும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கூறியுள்ளார்.
கங்குவா சஸ்பென்ஸ் வெளியானது
கங்குவா படத்தில் என்ன ரகசியம் உள்ளது என ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் நிலையில், படத்தின் இரண்டாவது டிரெய்லரில் அந்த ரகசியம் வெளியானதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் போட்டோவை பதிவிட்டு வருகின்றனர்.
அதாவது படத்தில் நடிகர் கார்த்தியும் உள்ளதாகவும், இது கார்த்திதான் என புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்க: அஜித் வழியில் கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சிகரெட் பிடிக்கும் கார்த்தி
அந்த போட்டோவில் கார்த்தி அழுகிய பற்களுடன் வருவது போல உள்ளது. நடிகர் கார்த்தி சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகள் தனது படத்தில் இருக்காது என கூறியிருந்த நிலையில், கங்குவா படத்திற்காக அந்த ரூல்ஸ் பிரேக் பண்ணிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
அது கார்த்திதானா இல்லையா, படத்தில் வேறு என்னென்ன சஸ்பென்ஸ் உள்ளது என்பதை திரையரங்கில் கங்குவா படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.