கங்குவா பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நாள் 3: 69% வீழ்ச்சியால் திணறும் சூர்யாவின் பீரியோடிக் ஆக்ஷன் படம்!
Author: kumar16 November 2024, 2:26 pm
கங்குவா மூன்றாம் நாள் வசூல் எப்ப்டி இருக்கப்போகிறது?
சிறுத்தை சிவா மற்றும் சூர்யா இணைந்து உருவாக்கிய “கங்குவா” என்ற வரலாறு ஆக்ஷன் படத்திற்கு பரபரப்பு எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. நவம்பர் 14-இல் வெளியான இந்த படம், விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், வெளியான அடுத்த நாளில் 69% வீழ்ச்சியுடன் பாக்ஸ் ஆஃபிஸில் பயங்கரமான வீழ்ச்சியை சந்தீத்தது.
கங்குவா கதை சுருக்கம்
பிரான்சிஸ் (சூர்யா) ஒரு பவுண்டி ஹண்டர், அவரது முந்தைய காதலியான திஷா பதானி கடும் சவாலாக நடத்திருப்பார். ஒரு நாள் கோவாவில் பிரான்சிஸ் ஒரு சிறுவனைக் காணும்போது, அந்த சிறுவனுடன் தனது முந்தைய பிறவியிலான உறவை நினைவுகூறிக்கொள்கிறான். அதன் பிறகு, படம் கங்குவா என்ற வீரனின் காலத்துக்குப் போகின்றது. கங்குவா யார்? அவன் தனது குலத்தை எவ்வாறு பாதுகாத்தான்? பிரான்சிஸ் கங்குவா ஆவானா? இந்த கேள்விகளின் பதில்கள் தான் கங்குவா படத்தின் முக்கிய திருப்பங்கள்.
கங்குவா பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் கணிப்பு
- நாள் 1: ₹24 கோடி
- நாள் 2: ₹7.43 கோடி
- நாள் 3: ₹0.3 கோடி
மொத்தம் 3 நாட்கள் (இந்தியா): ₹31.73 கோடி (சுமார்)
பட்ஜெட்டை பார்த்தா ரூ.100 கோடியை கூட தாண்டாது போல. இன்னொரு பக்கம் அமரன் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.