அந்த இடம் பெரிதாக இருக்க இதான் காரணம்.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

Author: Vignesh
12 February 2024, 10:52 am

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

kanika-updatenews360

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

மேலும், இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

kanika-updatenews360

இந்தநிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கனிகா சமூக வலைதளங்களில் அவருடைய மார்பகங்கள் குறித்து பதிவிட்டு வரும் மோசமான கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், எனக்கு புரியலை எதுக்காக இப்படியான கமெண்ட்களை பண்றீங்க உங்க வீட்டு பொண்ணு கிட்ட இருக்கக்கூடிய அதே விஷயம்தான் எனக்கும் இருக்கு, ஏதாவது புதுசாவா இருக்கு.. என்னோட மார்பகம் பெருசா இருக்கிறதுக்கு ஹார்மோன் மாற்றங்கள் தான் காரணம்.

kanika-updatenews360

கல்யாணம் பண்ணி கர்ப்பமாகி குழந்தை பெத்ததுக்கு அப்புறமா எனக்கு மட்டும் இல்லை, எல்லா பொருள்களுக்கும் வாழ்க்கையில இது பொதுவா கண்டிப்பா நடக்கக் கூடிய விஷயம் தான். சில பொண்ணுங்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் என் மார்பகம் பெரிதாக இருக்கிறது என அருவருப்பான வார்த்தைகளால் கருத்துக்கள் சொல்ற உங்களோட மனநிலையை பத்தி என்னன்னு யோசிக்கிறதுன்னு தெரியல என்று கடுப்பாகி பேசியுள்ளார்.

மேலும், குழந்தை பொறந்ததுக்கு அப்புறமா இந்த மாதிரி டிரஸ் எல்லாம் போடணுமான்னு கேள்வி கேக்குறீங்க? எனக்கு பிடிச்ச உடையை நான் சுதந்திரமா போட்டுக்கிறேன் என்ன டிரஸ் போட்டுக்கணும் என்னோட விருப்பம் எந்த மாதிரி டிரஸ் போட்டுக்கிட்டாலும், என் பையன் கிட்ட பொண்ணுங்களை எப்படி பார்க்கணும்ங்கறதை கண்டிப்பா சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பேன் என்று கனிகா மிகவும் கடுப்புடன் பதில் அளித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 267

    0

    0