மார்பகத்தை வெட்டி எடுத்த மருத்துவர்கள்.. புற்றுநோய் குறித்து சோகத்தை பகிர்ந்த எதிர்நீச்சல் கனிகா..!

Author: Vignesh
20 December 2023, 4:15 pm

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

kanika-updatenews360

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

kanika-updatenews360

இந்தநிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற கனிகா தனது வாழ்வில் தான் சந்தித்த சோதனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறித்த நிறைய பேசும் தன்னுடைய அம்மா அந்த விஷயத்தில் மாட்டிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

kanika-updatenews360

சாதாரணமாக அவருக்கு ஒருநாள் மார்பகத்தில் வலி ஏற்பட பலகட்ட சோதனைகளின் முடிவாக அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அது தன்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்றும், வாழ்க்கையில் சில நாட்கள் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

kanika-updatenews360

மேலும், ஹீமோதெரபி, ரேடியேசன் சிகிச்சை உள்ளிட்ட பல வேதனைகளை தனது அம்மா சந்தித்ததாக குறிப்பிட்ட கனிகா தான் கஷ்டமான தருணங்களை சந்தித்தபோது காரில் பாடல்களை ஒலிக்கவிட்டு அழுவேன் என்றும் மேலும், சிகிச்சையின் போது அம்மா பட்ட வேதனையை பார்த்து நொந்து போனதாகவும், அவரது மார்பகத்தை பாதுகாப்பு காரணத்திற்காக வெட்டி எடுத்த பிறகு அதனை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 295

    0

    0