சீனாவில் வெளியாகிறது ஐஸ்வர்யா ராஜேஷ்-யின் கனா திரைப்படம்..!

Author: Rajesh
25 February 2022, 5:47 pm

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கனா. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
பலருக்கு உத்வேதமாக அமைந்த அப்படம் பாராட்டுகளைக் குவித்தது. சிவகார்த்திகேயன் அந்தப் படத்தைத் தயாரித்ததோடு சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கனா திரைப்படம் சீனாவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை பெண் விளையாட்டுத் துறையில் முன்னேறத் துடிக்கும் கதை அம்சம் கொண்ட திரைப்படத்திற்கு சீனாவில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் மார்ச் 18-ம் தேதி அங்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் படங்கள் உலக அளவில் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருவது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவில் கிரிக்கெட் விளையாட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?