போதைப்பொருள் வழக்கில் அதிரடி தீர்ப்பு…பெருமூச்சு விட்ட பிரபல நடிகை.!

Author: Selvan
5 March 2025, 6:11 pm

5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து, முழுமையாக விடுவித்துள்ளது.

இதையும் படியுங்க: ஆடையில்லாமல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..இன்ஸ்டா போட்டோவால் ரசிகர்கள் ஷாக்.!

2020ஆம் ஆண்டு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நடிகை ராகினி திவேதி,நியாஸ் முகமது மற்றும் பலர் உட்பட 15 பேர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.செப்டம்பர் 8, 2020 அன்று சஞ்சனாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு,அவரும் கைது செய்யப்பட்டார்.

Sanjjanaa Galrani High Court Verdict

தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு,ஜாமீன் கிடைத்ததால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.கடந்த 2023 ஜூன் மாதம்,உயர்நீதிமன்றம் வழக்கு நடத்தப்பட்ட விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து 2024 மார்சில்,நீதிமன்றம் சஞ்சனா கல்ராணியை வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது.

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா,இந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றதற்குப் பிறகு,திரையுலகில் மீண்டும் முழு கவனம் செலுத்த உள்ளார்.அவர் விரைவில் புதிய திரைப்படங்கள் மற்றும் வணிக விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply