பெரும் சோகம்.!ரஜினி பட இயக்குனர் திடீர் மரணம்…!!

Author: Selvan
21 March 2025, 1:05 pm

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ஏ.டி. ரகு காலமானார்

பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான ஏ.டி. ரகு உடல் நலக்குறைவினால் இன்று காலமானார்.இவர் கன்னட திரையுலகில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி முக்கிய இயக்குனராக வலம் வந்தார்.

இதையும் படியுங்க: லிப் லாக் காட்சியில் சிம்ரன்.. காதலை கைவிட்ட பிரபலம் : பல நாள் கழித்து வெளியான நிஜம்!

இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் அதிரடி,குடும்பக் கதைகளுடன் கலந்த சுவாரஸ்யமான திரைக்கதைகளை கொண்டிருந்தன.குறிப்பாக கன்னட திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவராக விளங்கிய மறைந்த அம்பரீஷை வைத்து 23-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஹிந்தியில் Meri Adalat என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

மிக குறுகிய காலத்திலேயே திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்த ஏ.டி. ரகு, தன்னுடைய 55 வயதில் இன்று மரணம் அடைந்துள்ளார்.இவருடைய மரணம் அவருடைய குடும்பம் மற்றும் திரையுலகத்தை சேர்ந்த நண்பர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ‘எம்புரான்’ படத்திற்கு மோகன்லால் செய்த தியாகம்..தமிழ் நடிகர்கள் தாக்கப்பட்டார்களா.!
  • Leave a Reply